தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடுசெய்திருந்த மே தின நிகழ்வு, இன்று(01) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு நகரில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உபதலைவர் கே.யோகவேல் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு நகர் வரை சென்று, தொடர்ந்து மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு முன்பாக மாபெரும் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உபதலைவர் கே.யோகவேல், கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான திரவியம், மகளிர் அணித்தலைவர திருமதி. செல்வி மனோகர் மற்றும் கட்சியின் திருகோணமலை - மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.