மனிதநேயம் உயிர்வாழ்கிறது

வவுனியா வேப்பங்குளத்தைச் சேர்ந்த திரு. யோகராஜா நிரஞ்சன் என்பவர் இன்று சுமார் ஒரு தொகைப் பணத்துடன் தனது பணப்பையினைத் தவறவிட்டிருந்தார்.
அப் பணப்பையினை அவ் வழியே சென்ற திரு. கஜரூபன் அவர்கள் கண்டெடுத்ததுடன், அதில் இருந்த ஆள் அடையாள அட்டை மூலம் உரிமையாளரை அடையாளப்படுத்திக் கொண்டு, இன்று அவரது பிறந்த நாள் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
உடனே அதனை உரியவரிடம் கொண்டு செல்லும் வகையில் பணப்பை, பணம் மற்றும் அடையாள அட்டையின் புகைப்படத்துடன் உரியவரின் உறவினர்கள் நண்பர்கள் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டார்.
இதன் மூலம் தகவல் அறிந்த நிறஞ்சனின் நண்பர் , நிறஞ்சனின் வீட்டிற்க்குச் சென்று விபரத்தைச் சொல்லி அவரைக் கஜரூபனிடம் தொடர்பு படுத்தியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்த்திரார நிறஞ்சன் , பேரானந்தத்துடன் கஜரூபன் அவர்கள் பணி புரியும் நீதவான் நீதிமன்றத்தில் வைத்து தவற விடப்பட்ட பணப்பை , பணம் மற்றும் அடையாள அட்டையினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
தன் பிறந்த நாளில் தொலைத்த பொருளை தன் பிறந்த நாள் பரிசாக கிடைத்ததை எண்ணி நிறஞ்சன் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
பணப்பையைக் கண்டெடுத்த கஜரூபன் தனது முகநூலில் இட்ட பதிவு,
இன்று 29.04.2016 மதியம் எனது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் சென்று கொண்டிருக்கையில் பண்டாரிகுளம் வீதியில் ஒரு தொகைப் பணத்துடன் பணப்பை ஒன்றைக் கண்டெடுத்தேன்.
அதனுள் இருந்த அடையாளஅட்டை விபரப்படி – இன்று தனது 33வது பிறந்தநாளைக் கொண்டாடும் முகமறியாத நண்பர் “யோகராஜா நிரஞ்சன்” என்பவருடையது என அறிகிறேன். உரியவரைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன் …N.K. கஜரூபன்
தொலைபேசி- 077 6059585

பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கஜரூபன் தனது முகநூலில் பதிவு செய்த தகவல் அப்படியே…
நான்பணிபுரியும் வவுனியா நீதவான் நீதிமன்றில் வைத்து கண்டெடுத்த பணத்தையும் , அடையாள அட்டையையும் உரியவரிடம் ஒப்படைத்தேன்.
எனது முகப்புத்தக நண்பர் ஒருவரின் நண்பர் திரு. யோகராஜா நிரஞ்சன் அவர்களின் வீட்டுக்குச் சென்று விடயத்தைக் கூறி அவரை என்னிடம் வழிப்படுத்தியிருந்தார்.
அவருக்கும், உரியவரிடம் அவரது பொருளை ஒப்படைப்பதற்கு வசதியாக இச் செய்தியைப் பகிர்ந்த அத்தனை உறவுகளுக்கும், ஆர்வத்துடன் தொலைபேசியில் அழைத்து, என்னை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும், என்னை நல்லவனாக பெற்ற என் பெற்றோருக்கும், சிறுவயதுமுதல் என்னை வழிப்படுத்திய கம்பவாரிதி ஜெயராஜ் அண்ணாவுக்கும் கோடானுகோடி நன்றிகள் !
—அன்புடன் N.k. Kajarooban