மன்னாரை சேர்ந்த தமிழ் சிறுவர்கள் இருவர் பௌத்த துறவிகள் ஆக்கப்பட்டு உள்ளனர்.
இருவரும் உறவினர்கள் ஆவர். ஒருவரின் பெயர் ஸ்ரீகரன் தனுசன். மற்றவர் கனகராசா தனுசன். கண்டகுளிய சமுத்திரசன்ன விகாரையில் பாலர் பிக்குகளாக பாடம் படிக்கின்றனர்.
இவர்களின் பெயர்கள் முறையே கொகெலிய சுமண, கொகெலிய கனகராசா என்று மாற்றப்பட்டு உள்ளன.
இவர்கள் அடுத்த ஓராண்டுக்கு இடையில் சிங்கள பௌத்த தோத்திரங்களில் தேர்ச்சி பெறுகின்ற அளவுக்கு திறமையுடனும், ஆர்வத்துடனும் உள்ளனர் என்று இவர்களுக்கு கற்பித்து கொடுக்கின்ற பிரதம விகாராதிபதி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
பௌத்த சமயம் மீதான பெருவிருப்பம் காரணமாக இருவரும் இனம், சமயம் ஆகியவற்றை விட்டு கொடுத்து பௌத்த துறவிகளாக காவியுடை தரித்து உள்ளனர் என்று சிங்கள செய்திகள் கூறுகின்றன.
சிங்கள இணைய தளங்களில் இவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.