க. பொ. த சாதாரண பரீட்சை டிச. 06 இல்!

க. பொ. த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 06 ஆம் திகதி ஆரம்பம் ஆகின்றது.
டிசம்பர் 17 ஆம் திகதி வரை பரீட்சை இடம்பெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்து உள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகள், தனிப்பட்டவர்கள் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.
பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான படிவங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ள விளம்பரத்தின்படி விண்ணப்பங்களை தயாரிக்க வேண்டும்.
அத்துடன் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விசேட தேவை உடைய மாணவர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். எ. ஜே. புஷ்பகுமார அறிவித்து உள்ளார்.