ஆஸ்திரேலிய நீதிவானாக இலங்கை முஸ்லிம் பெண்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நீதவான் நீதிமன்ற நீதிவானாக இலங்கை முஸ்லிம் பெண் ஒருவர் நியமனம் பெற்று உள்ளார்.
நாட்டில் கண்டியை சேர்ந்த உர்பா மசூத் ஐக்கிய இராச்சியத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த பிற்பாடு ஆஸ்திரேலியாவுக்கு சென்று கடந்த 2003 ஆம் ஆண்டு முதல்  சட்டத்தரணியாக பணியாற்றினார்.
ஆஸ்திரேலிய சட்ட மா அதிபர்  இவருக்கு நீதிவான் நியமனம் வழங்கப்பட்டு உள்ளமையை உத்தியோகபூர்வமாக அறிவித்து உள்ளார்.
உர்பா மசூத் குற்றவியல் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குடும்ப சட்டம், விக்டோரியன் பூர்வீக குடி சட்டம் போன்றவற்றில் குறிப்பிடத் தக்க அனுபவம் உடையவர். இவர் இரு பிள்ளைகளின் தாய் ஆவார்.