விஜய் நடித்த தெறி உலகம் முழுவதும் வெளியானாலும் தமிழகத்தி உள்ள செங்கல்பட்டில் இப்படம் ரிலிஸ் ஆகவில்லை.
படத்திற்கு தயாரிப்பாளர் தானு அதிக விலை மற்றும் எம்ஜி அடிப்படையில் கேட்டதால், தியேட்டர் அதிபர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
தற்போது படம் வெளியாக 2 வாரங்களை கடந்துள்ள நிலையில், இரண்டு தரப்பினரும் சுமூகமாக பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
படத்தை வெளியிட அவர்கள் முன்வந்திருந்தாலும் விகிதாச்சார அடிப்படையில்தான் படத்தை திரையிடுவோம் என நிபந்தனை விதித்துள்ளார்களாம்.
இந்த நிபந்தனை தெறிக்கு மட்டுமில்லையாம். இனி வெளியாகவுளள அனைத்து படங்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும் என தெரிவித்துள்ளனர்.