யாழ். கொடிகாமம் பகுதியில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, கொழும்பு விஷேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர்.
கொழும்பு விஷேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 1.00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கஞ்சாவினை கொழும்பிற்கு கடத்த முற்பட்ட நபர் கஞ்சா பொதியினை விட்டுவிட்டு, தப்பி ஓடியுள்ளார்.
எனினும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மோட்டார் சைக்கிளின் இலக்கத்தினை வைத்து தப்பி ஓடிய நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாகவும் கொழும்பு விஷேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.