20:30:00 | 0
comments | Read More
Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts
மீனவர் பிரச்சினை தீரும்வரை இலங்கைக்கு இந்தியா உதவக் கூடாது!
இலங்கைச் சிறையில் வாடும் அனைத்து தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அவர், இலங்கை கடற்படை வசம் உள்ள படகுகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினர் எந்தவிதமான தாக்குதலையும் நடத்தக் கூடாது, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு காண வேண்டும் எனவும் கருணாநிதி தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
அதுவரை, இலங்கை அரசுக்கு இந்தியா எந்த உதவியும் செய்யக்கூடாது. இது தான் தமிழ் மக்களின் கோரிக்கை. இதனை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
18:04:00 | 0
comments | Read More
அவர்கள் நம்மை முந்தி இருக்கிறார்கள்- ஷேலா ரஷீதாவின் உரை
ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு சார்பாக ‘ஜனநாயகத்தின் அச்சுறுத்தல்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டத்தில், டில்லி ஜாமியா மிலியா கல்லூரியின் ஆசிரியர் மனிஷா சேத்தி, ஆந்திராவைச் சேர்ந்த புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் கல்யாண் ராவ், சென்னை எம்.ஐ.டி.எஸ்.ஐச் சேர்ந்த பேராசிரியர் லஷ்மணன் மற்றும் ஜெஎன்யு மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் ஷேலா ரஷீதா ஆகியோர் உரையாற்றினர். ஷேலா ரஷீதாவின் உரை அனைவரையும் ஈர்த்தது. அதன் முக்கியப் பகுதிகள் வருமாறு:
கல்வி காவிமயம் குறித்து நாம் முன்பு பேசியபோது, ‘எங்கே நடக்கிறது?’ என்று கேட்டார்கள். இப்போது நம் கண்முன்னே அது நடந்து வருவதைப் பார்க்கிறோம். பாஜக ஆட்சியின் பாசிசம், முஸ்லிம்களை வேட்டையாடுவதில் மட்டுமல்ல; அனைத்து மட்டத்திலும் அது நடக்கிறது. இதற்கு முந்தைய அரசுகள் யோக்கியமானவை என்று சொல்வதல்ல நமது நோக்கம். இப்போது, மிகவும் குறிப்பானமுறையில் பாசிச செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த அரசை ஏன், நாம் பாசிஸ்ட் என்கிறோம்? தனது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு என்பது இருக்கவே கூடாது என்று நினைக்கிறது. அதனால், பாசிசம் என்கிறோம். அகண்ட பாரதம் என்று எதைச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
அவர்கள் மிகவும் வசதியான முறையில் அமர்ந்திருக்கிறார்கள். சாதிய ஏற்றத்தாழ்வுகள் அதற்கு உதவுகின்றன. நாம், சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், அவர்கள் பன்மைத்துவம் ஒழிக்கப்பட விரும்புகிறார்கள். அவர்கள் தேசியவாதத்தின் உள்ளீடு என்ன? அது பன்மைத்துவத்தை மதிக்கிறதா என்றால் இல்லை. பாகிஸ்தான் எதிர்ப்பின் ஊடாக முஸ்லிம் எதிர்ப்பை கட்டமைக்கிறார்கள். ஒவ்வொரு முஸ்லிம் குடியிருப்பும் குட்டி பாகிஸ்தானாக அவர்கள் கண்களுக்குத் தெரிகிறது. ஒருவேளை, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடக்கவில்லை என்றால் தேசியவாத உணர்ச்சிக்கு மிகவும் திண்டாடியிருப்பார்கள்.
ஆனால், நமது தேசியவாதம் ஏகாதிபத்திய எதிர்ப்பை வரித்துக்கொண்டது. ஆனால், அவர்களின் தேசியவாதம் உலகமயத்தை ஆதரிப்பது. அனைத்து துறைகளையும் உலக வர்த்தகக் கழகத்தின்கீழ் கொண்டுவர நினைக்கிறார்கள். மக்களின் வாழ்க்கையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பதை மறைக்கத்தான் தேசியவாதக் கூச்சல் எழுப்புகிறார்கள். பிரியா பிள்ளை என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், மனித உரிமை மீறல் தொடர்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டார். ஆனால், விஜய் மல்லையா இந்தியாவைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார். பிரியா பிள்ளையை, டைம்ஸ் நவ்-ல் ஆதரித்த கவிதா கிருஷ்ணனை, ‘வெட்கங்கெட்ட பெண்மணி’ என்று அர்னப் அழைத்தார். ஆனால், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்த விஜய் மல்லையாவையோ, அவரை ஆதரிப்பவர்களையோ அதே உக்கிரத்துடன் அர்னப் கண்டிக்கிறாரா? எனவே, இவர்களின் தேசியவாதம் ஒரு மோசடி.
மேலும், அது ஒருவகையான பகட்டு மற்றும் வெற்றுணர்ச்சி. ஒரு நீர்க்குமிழியைப் போன்றது. அதன் பரப்பை போன்று வழவழப்புடன் இருக்கும். லேசாகக் குத்திவிட்டால் உடைந்துவிடும். ‘சுவச் பாரத்’ நாடகம் அதில் ஒன்று. அதற்கு நம்மிடமிருந்து ஏராளம் வரி வசூலிக்கப்படுகிறது. எங்காவது ஓரிடத்தில் புதிதாக ஒரு குப்பைத் தொட்டி வைத்திருக்கிறார்களா? துப்புரவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் கையுறைகளாவது வழங்கியிருக்கிறார்களா? இல்லை. எங்கள் ஜெஎன்யு வளாகத்தில், துப்புரவு பணியாளர்களுக்கு ரப்பர் காலணிகள் வழங்கப்பட வேண்டும் என்று பலமுறை போராட்டங்கள் நடத்தினோம். சுவச் பாரத் திட்டம், உயர்சாதி மனநிலையின் நடிப்பு. அதை வலியுறுத்துகிறமுறையில் பார்ப்பனீயமாகவும், கேலிக்கூத்தாகவும் இருக்கிறது. சுவச் பாரத் தொடங்கப்பட்ட இடம் வால்மீகி (தலித் மக்கள்) காலனி. சுத்தமாக இருக்க அவர்களுக்குச் சொல்லவேண்டிய தேவை என்ன?
அடுத்த நீர்க்குமிழி, பெண்குழந்தையுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது. பெண்கள் தொடர்பான எந்தப் பிரச்னைக்கும் சொல்லப்பட்ட எளிமையான தீர்வு அது. ஆனால், அதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் கெட்ட வார்த்தைகள் வந்து விழுகிறது. கவிதா கிருஷ்ணன், சில கேள்விகளை முன்வைத்த உடனே அவரை வன்புணர்ச்சி செய்யவேண்டும் என்று குரல் எழும்பியது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்றறியும் சோதனையை அனுமதிக்கும் முடிவை மேனகா காந்தி எடுத்துள்ளார். கருக்கலைப்புக்கு பெற்றோரைத் தண்டிக்கும்வகையில் சட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. முன்பு, மருத்துவரின் தவறாகக் கருதப்பட்டு வந்தது. இப்போது, பொறுப்பை தட்டிக்கழிக்கச் செய்து பழி சமூகத்துக்குக் கடத்தப்படுகிறது. தாத்ரி கொலை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எந்த சமூகக் குற்றத்துக்கும் யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்ற அபாயகட்டத்தை நெருங்குகிறோம். கவர்ச்சியான சொல்லாடல்கள்வழியே பெரும் தீங்குகள் மூடி மறைக்கப்படுகின்றன.
அடுத்ததாக, ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதுபற்றி உணர்ச்சி ஊட்டப்படுகிறது. ராணுவ வீரரின் சாவு உயர்ந்த தியாகமாகப் போற்றப்படுகிறது. இப்படித்தான் பெண்களும் போற்றப்பட்டார்கள். பெண்களை ‘பாரத் மா’ என்றழைத்து, அவளை தியாகத்தின் சின்னமாக விதந்தோதினார்கள். பின்னர், பெண்ணின் உரிமைகள் அனைத்தையும் பறித்தார்கள். ‘நீ ஒரு தேவி. உனக்கு எதற்குச் சுதந்திரம்? தேவிக்கு ஆலயம் போன்று நீ வீட்டில் மட்டுமே இருக்க வேண்டியவள். முஸ்லிம் பையனை விரும்பக் கூடாது’ என்று அவள் முடக்கப்படுகிறாள். இதே நிலைமை ராணுவத்தினருக்கு ஏற்பட்டிருக்கிறது.
ராணுவத்தினரின்மீது அன்புள்ளவர்கள் என்றால் ராணுவத்தினரின் சங்கத்துக்கு அனுமதி வழங்கட்டும். பாக்டீரியாகூட உயிர் வாழ முடியாத ஓரிடத்திலே எதற்காக அவர்கள் அனுப்பப்படுகிறார்கள்? எதிரியின் ஆயுதங்களால் அல்ல; தற்கொலையை மரணித்த ராணுவ வீரர்களே அதிகம். ராணுவத்துக்குள் சாதிய அடுக்குகள் இல்லையா? முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் சமூகத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்தோர்?
இப்போது, முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்? இதை, எப்படி நாம் எடுத்துச்செல்லப் போகிறோம்? ஜெர்மனியின் நாஜிகளைவிடவும் மோசமானவர்களாக இந்துத்துவர்கள் இருக்கிறார்கள். வீடுவீடாக செல்லவேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. வீதிகளில் நிற்க வேண்டியவர்கள் நாம். ஆனால், அவர்கள் நம்மை முந்தி இருக்கிறார்கள். அவர்களை வீதிகளில் சந்திக்கும் நேரம் வந்துவிட்டது. தேசத்தின் விரோதிகள் அவர்கள் என்று, எடுத்துச் சொல்லவேண்டிய கடமை வந்துள்ளது. சிலர் இதைச் சொல்லவேண்டாம் என்று கருதுகிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. ஐரம் சர்மிளா அல்லது ரோகித்தின் தாய் பாரத் மாதாக்கள் என்றால், பாரத் மாதா கீ ஜே என்று சொல்லலாம். ஸ்மிருதி இரானிதான் பாரத் மாதா என்றால், நம்மால் சொல்லமுடியுமா?
இந்தியா முழுமையான தேசமல்ல. தேசமாக வளர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சாதியை ஒழிக்காமல் சாத்தியமில்லை என்றார் அம்பேத்கர். தலித் மக்களையும், பெண்களையும் அடிமைப்படுத்தி உருவாக்கும் தேசியவாதத்துக்கு நாம் விசுவாசிகளாக இருக்கமுடியாது. அந்தப் பொருளில் நாம் தேசத்துரோகிகள்தான். இதைச் சொன்னதற்காக என்மீது வழக்கு பதியப்படலாம். கவலையில்லை. ஆம், நாம் தேசியவாதத்தை புரட்சிகரக் கண்ணோட்டத்துடன் மறுவரையறை செய்யவேண்டிய தேவை உள்ளது. இந்த நாட்டை பாதுகாப்பது என்பது, இந்நாட்டின் மக்களைப் பாதுகாப்பதுதான்.
ஜெஎன்யு பற்றியும் பேசச் சொன்னார்கள். அப்சல் குருவின் தூக்கை நாங்கள் விமர்சித்தோம். இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் பலரும்தான் அதைச் செய்தார்கள். ராம ஜென்மபூமியை ஆதரித்து ஏபிவிபி, ஜெஎன்யு-வில் கூட்டம் போட்டார்கள். நாங்கள் அதை எதிர்த்து வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். கூட்டம் நடத்தக்கூடாது என்று சொல்லவில்லை. போலீசை அழைக்கவில்லை. ஏனெனில், முட்டாள்களாக அவர்கள் இருக்கும் சுதந்திரத்தை மதிக்கிறோம். இதுதான் அவர்களுக்கும், நமக்குமிடையே இருக்கும் வித்தியாசம்.
இந்தப் பிரச்னைகளைப்பற்றி பேசும்போது, காஷ்மீர் பற்றி கேள்வி கேட்கிறார்கள். நான் காஷ்மீரைச் சேர்ந்தவள். ஆனால், ஒரு இடதுசாரியாகவே எனது கருத்துகளைப் பகிர்கிறேன். எனது அடையாளத்துடன் எனது கருத்துகளை இணைத்து என்னை சுருங்கிப் புரிந்துகொள்ள இடமளிக்கவில்லை. இந்தியாவின் கோரமுகம் குறித்த புரிதல் எனக்குண்டு. ஜெஎன்யு-வுக்கு வந்தபிறகு நான் தெரிந்துகொண்ட உண்மை, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு காஷ்மீர் உருவாக்கப்பட்டிருப்பதைக் கண்ணுற்றேன்-காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை. எனவே, என்னிடம் காஷ்மீர்குறித்து கருத்துக் கேட்பது என்னை குற்றவாளியாக்கும் தந்திரம். ஒரு சுதந்திரமான விவாதத்தை அனுமதியுங்கள். காஷ்மீர்குறித்த எனது நிலைப்பாட்டை நான் தெரிவிக்கிறேன். நான் ஒரு இடதுசாரி, மதச்சார்பற்றவள் மற்றும் அம்பேத்கரிஸ்ட்.
தொகுப்பு: ராஜ்
18:00:00 | 0
comments | Read More
அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
2016- தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு
1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்: ஜெயலலிதா
2. கும்மிடிபூண்டி: கே.எஸ்.விஜயகுமார்
3. பொன்னேரி (தனி): சிறுணியம் ஞ. பலராமன்
4. திருத்தணி : ஞ.ஆ. நரசிம்மன்
5. திருவள்ளூர் : ஏ.பாஸ்கரன்
6. பூந்தமல்லி (தனி): டி.ஏ.ஏழுமலை
7. ஆவடி : க.பாண்டியராஜன்
8. மதுரவாயல்:பா.பென்ஜமின்
9. அம்பத்தூர்: ஏ. அலெக்சாண்டர்
10. மாதவரம்: டி.தஷ்ணாமூர்த்தி
11. திருவொற்றியூர்: பி.பால்ராஜ்
12. பெரம்பூர் : ஞ.வெற்றிவேல்
13. கொளத்தூர் : ஜெ.சி.டிபிரபாகர்
14. வில்லிவாக்கம் : தாடி ம. ராசு
15. திரு.வி.க. நகர் (தனி) : வ.நீலகண்டன்
16. எழும்பூர் (தனி): பரிதி இளம்வழுதி
17. ராயபுரம்: டி.ஜெயக்குமார்
18. துறைமுகம்: கே.எஸ்.சீனிவாசன்
19. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி : ஏ.நூர்ஜஹான்
20. ஆயிரம்விளக்கு : பா. வளர்மதி
21. அண்ணாநகர் : எஸ்.கோகுல இந்திரா
22. விருகம்பாக்கம்: விருகை வி.என்.ரவி
23. சைதாப்பேட்டை :சி.பொன்னையன்
24. தியாகராயநகர்: சரஸ்வதி ரெங்கசாமி
25. மைலாப்பூர் : சு. நடராஜ்
26. வேளச்சேரி: நீலாங்கரை எம்.சி.முனுசாமி
27. சோழிங்கநல்லூர்: லியோ என்.சுந்தரம்
28. ஆலந்தூர்: பண்ருட்டி ச.இராமச்சந்திரன்
29. ஸ்ரீபெரும்புதூர் (தனி):மு. பழனி
30. பல்லாவரம்: சி.வி.இளங்கோவன்
31. தாம்பரம்: சிட்லபாக்கம் ச.இராசேந்திரன்
32. செங்கல்பட்டு : சு. கமலகண்ணன்
33. திருப்போரூர் : ஆ.கோதண்டபாணி
34. செய்யூர் (தனி) : ஏ.முனுசாமி
35. உத்திரமேரூர்: வாலாஜாபாத் பா.கணேசன்
36. காஞ்சிபுரம் : மைதிலி திருநாவுக்கரசு
37. அரக்கோணம் (தனி) :கோ.சி.மணிவண்ணன்
38. சோளிங்கர் : என்.ஜி.பார்த்திபன்
39. காட்பாடி: எஸ்.ஆர்.கே.அப்பு
40. ராணிப்பேட்டை: சுமைதாங்கி சி.ஏழுமலை
41. ஆற்காடு: மு.ஏ. ராமதாஸ்
42. வேலூர் : ப. நீலகண்டன்
43. அணைக்கட்டு : ம.கலையரசு
44. கீழ்வைத்தியணான்- குப்பம் (தனி): ஜி.லோகநாதன்
45. குடியாத்தம் (தனி) : சி.ஜெயந்தி பத்மநாபன்
46. வாணியம்பாடி: டாக்டர் நீலோபர் கபீல்
47. ஆம்பூர் : ஆர்.பாலசுப்பிரமணி
48. ஜோலார்பேட்டை: கே.சி.வீரமணி
49. திருப்பத்தூர் : டி.டி.குமார்
50. ஊத்தங்கரை (தனி) : மனோரஞ்சிதம் நாகராஜ்
51. பர்கூர்: சி.வீ.ராஜேந்திரன்
52. கிருஷ்ணகிரி: ஏ.கோவிந்தராஜ்
53. வேப்பனஹள்ளி: கே.பி.முனுசாமி
54. ஒசூர்: பி.பாலகிருஷ்ணா ரெட்டி
55. தளி : சி.நாகேஷ்
56. பாலக்கோடு : கே.பி.அன்பழகன்
57. பென்னாகரம்: வேலுமணி
58. தருமபுரி: திரு. பு.தா. இளங்கோவன்
59. பாப்பிரெட்டிபட்டி : குப்புசாமி
60. அரூர் (தனி): முருகன்
61. செங்கம் (தனி): தினகரன்
62. திருவண்ணாமலை: பெருமாள்நகர் மு.ராஜன்
63. கீழ்பென்னாத்தூர் : செல்வமணி
64. கலசபாக்கம்: பன்னீர்செல்வம்
65. போளூர்: முருகன்
66. ஆரணி :சேவூர் எஸ்.இராமச்சந்திரன்
67. செய்யார்: தூசி கே.மோகன்
68. வந்தவாசி (தனி) : மேகநாதன்
69. செஞ்சி: கோவிந்தசாமி
70. மைலம்: அண்ணாதுரை
71. திண்டிவனம் (தனி): இராஜேந்திரன்
72. வானூர் (தனி) : சண்முகம்
74. விக்கிரவாண்டி : சேவல் ஆர்.வேலு
75. திருக்கோயிலூர்: சேவல் ஜி.கோதண்டராமன்
76. உளுந்தூர்பேட்டை: குமரகுரு
77. ரிஷிவந்தியம்: கதிர்.தண்டபாணி
78. சங்கராபுரம்: இராஜசேகர்
79. கள்ளக்குறிச்சி (தனி): பிரபு
80. கங்கவல்லி (தனி) : மருதமுத்து
81. ஆத்தூர் (தனி) : சின்னதம்பி
82. ஏற்காடு (எஸ்டி): சித்ரா
83. ஓமலூர்: வெற்றிவேல்
84. மேட்டூர் : சந்திரசேகரன்
85. எடப்பாடி : எடப்பாடி கே.பழனிசாமி
86. சங்ககிரி: இராஜா
87. சேலம் (மேற்கு): வெங்கடாஜலம்
88. சேலம் (வடக்கு) :சரவணன்
89. சேலம் (தெற்கு): சக்திவேல்
90. வீரபாண்டி : மனோன்மணி
91. ராசிபுரம் (தனி): டாக்டர் சரோஜா
92. சேந்தமங்கலம் (எஸ்டி): சந்திரசேகரன்
93. நாமக்கல்: பாஸ்கர்
94. பரமத்தி வேலூர்: இராஜேந்திரன்
95. திருச்செங்கோடு: பொன். சரஸ்வதி
96. குமாரபாளையம்: தங்கமணி
97. ஈரோடு (கிழக்கு):தென்னரசு
98. ஈரோடு (மேற்கு): இரா.வரதராஜன்
99. மொடக்குறிச்சி : சிவசுப்பிரமணி
100. தாராபுரம் (தனி) : பொன்னுசாமி
101. பெருந்துறை : தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்
102. பவானி : கருப்பணன்
103. அந்தியூர்: ராஜா (எ) ராஜா கிருஷ்ணன்
104. கோபிச்செட்டிப்பாளையம்: செங்கோட்டையன்
105. பவானிசாகர் (தனி) : ஈஸ்வரன்
106. உதகமண்டலம் : கப்பச்சி டி.வினோத்
107. கூடலூர் (தனி): கலைச்செல்வன்
108. குன்னூர்: ராமு (சாந்தி ஏ.ராமு)
109. மேட்டுப்பாளையம் : சின்னராஜ்
110. அவினாசி (தனி) : தனபால்
111. திருப்பூர் (வடக்கு): விஜயகுமார்
112. திருப்பூர் (தெற்கு): குணசேகரன்
113. பல்லடம்: கரைப்புதூர் ஏ.நடராஜன்
114. சூலூர்: கனகராஜ்
115. கவுண்டம்பாளையம்: ஆறுக்குட்டி
116. கோயம்புத்தூர் வடக்கு : அருண்குமார்
117. தொண்டாமுத்தூர் : வேலுமணி
118. கோயம்புத்தூர் தெற்கு: அம்மன் கே.அர்ச்சுணன்
119. சிங்காநல்லூர் : சிங்கை என்.முத்து
120. கிணத்துக்கடவு: சண்முகம்
121. பொள்ளாச்சி: பொள்ளாச்சி வி.ஜெயராமன்
122. வால்பாறை (தனி): திருமதி கஸ்தூரி வாசு
123. உடுமலைப்பேட்டை : உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
124. மடத்துக்குளம் : மனோகரன்
125. பழனி : குமாரசாமி
126. ஆத்தூர்: நத்தம் இரா.விசுவநாதன்
127. நிலக்கோட்டை (தனி): தங்கதுரை
128. நத்தம்: ஷாஜகான்
129. திண்டுக்கல்: திண்டுக்கல் சி.சீனிவாசன்
130. வேடசந்தூர் : டாக்டர் வி.பி.பி.பரமசிவம்
131. அரவக்குறிச்சி : செந்தில்பாலாஜி
132. கரூர்: விஜயபாஸ்கர்
133. கிருஷ்ணராயபுரம் (தனி): ஆ.கீதா
134. குளித்தலை: சந்திரசேகரன்
135. மணப்பாறை: ஆர்.சந்திரசேகர்
136. ஸ்ரீரங்கம்: வளர்மதி
137. திருச்சிராப்பள்ளி (மேற்கு): டாக்டர் தமிழரசி
138. திருச்சிராப்பள்ளி (கிழக்கு): மனோகரன்
139. திருவெறும்பூர் : கலைச்செல்வன்
140. லால்குடி: விஜயமூர்த்தி
141. மண்ணச்சநல்லூர்: பரமேஸ்வரி முருகன்
142. முசிறி: செல்வராசு
143. துறையூர் (தனி) : திருமதி மைவிழி
144. பெரம்பலூர் (தனி): இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
145. குன்னம் : ராமச்சந்திரன்
146. அரியலூர் :தாமரை ராஜேந்திரன்
147. ஜெயங்கொண்டம்: ராமஜெயலிங்கம்
148. திட்டக்குடி (தனி) : அய்யாசாமி
149. விருத்தாசலம் : கலைச்செல்வன்
150. நெய்வேலி : இரா. இராஜசேகர்
151. பண்ருட்டி : திருமதி சத்யா பன்னீர்செல்வம்
152. கடலூர் : சம்பத்
153. குறிஞ்சிப்பாடி: சொரத்தூர் இரா.ராஜேந்திரன்
154. புவனகிரி: திருமதி செல்வி ராமஜெயம்
155. சிதம்பரம் : பாண்டியன்
156. காட்டுமன்னார் கோயில் (தனி) : மணிகண்டன்
157. சீர்காழி (தனி) : பாரதி
158. மயிலாடுதுறை : ராதாகிருஷ்ணன்
159. பூம்புகார் : நடராஜன்
160. கீழ்வேலூர் (தனி): மீனா
161. வேதாரண்யம் : கிரிதரன்
162. திருத்துறைப்பூண்டி (தனி) : திருமதி உமா மகேஸ்வரி
163. மன்னார்குடி: திருமதி சுதா
164. திருவாரூர்: பன்னீர்செல்வம்
165. நன்னிலம் : காமராஜ்
166. திருவிடைமருதூர் (தனி): சேட்டு
167. கும்பகோணம் :ராம. ராமநாதன்
168. பாபநாசம் : இரா.துரைக்கண்ணு
169. திருவையாறு :சுப்பிரமணியன்
170. தஞ்சாவூர் : ரெங்கசாமி
171. ஒரத்தநாடு: ஆர்.வைத்திலிங்கம்
172. பட்டுக்கோட்டை : சேகர்
173. பேராவூரணி : மா.கோவிந்தராஜன்
174. கந்தர்வகோட்டை (தனி) : நார்த்தான்மலை பா.ஆறுமுகம்
175. விராலிமலை : டாக்டர் விஜயபாஸ்கர்
176. புதுக்கோட்டை: கார்த்திக்
177. திருமயம் : வைரமுத்து
178. ஆலங்குடி: கலைச்செல்வன்
179. அறந்தாங்கி : இரத்தினசபாபதி
180. காரைக்குடி: பேராசிரியை கற்பகம் இளங்கோ
181. திருப்பத்தூர் : அசோகன்
182. சிவகங்கை : பாஸ்கரன்
183. மானாமதுரை (தனி) : மாரியப்பன் கென்னடி
184. மேலூர் : பெரியபுள்ளான் (எ) செல்வம்
185. மதுரை கிழக்கு : தக்கார் பாண்டி
186. சோழவந்தான் (தனி): மாணிக்கம்
187. மதுரை வடக்கு : பாண்டியன்
188. மதுரை தெற்கு: சரவணன்
189. மதுரை மையம்: ஜெயபால்
190. மதுரை மேற்கு : செல்லூர் மு. ராஜு
191. திருப்பரங்குன்றம் : சீனிவேல்
192. திருமங்கலம் : உதயகுமார்
193. உசிலம்பட்டி : பா.நீதிபதி
194. ஆண்டிபட்டி : தங்க தமிழ்செல்வன்
195. பெரியகுளம் (தனி) : பேராசிரியர் டாக்டர் மு.கதிர்காமு
196. போடிநாயக்கனூர் : ஓ.பன்னீர்செல்வம்
197. கம்பம் : ஜக்கையன்
198. ராஜபாளையம் : ஷியாம்
199. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி): சந்திரபிரபா
200. சாத்தூர்: எதிர்கோட்டை சுப்பிரமணியன்
201. சிவகாசி : ராஜேந்திரபாலாஜி
202. விருதுநகர் : கலாநிதி
203. அருப்புக்கோட்டை : முத்துராஜா
204. திருச்சுழி: தினேஷ்பாபு
205. பரமக்குடி (தனி) : டாக்டர் முத்தையா
206. ராமநாதபுரம் : டாக்டர் மணிகண்டன்
207. முதுகுளத்தூர் : திருமதி கீர்த்திகா முனியசாமி
208. விளாத்திகுளம் : திருமதி உமாமகேஸ்வரி
209. தூத்துக்குடி: செல்லப்பாண்டியன்
210. ஸ்ரீவைகுண்டம் : டாக்டர் புவனேஸ்வரன்
211. ஒட்டப்பிடாரம் (தனி): சுந்தரராஜ்
212. கோவில்பட்டி : இராமானுஜம் கணேஷ்
213. சங்கரன்கோவில் (தனி): திருமதி ஏ.ஆ. ராஜலெட்சுமி
214. வாசுதேவநல்லூர் (தனி): மனோகரன்
215. தென்காசி: செல்வமோகன்தாஸ்
216. ஆலங்குளம்: திருமதி எப்சி கார்த்திகேயன்
217. திருநெல்வேலி : நயினார் நாகேந்திரன்
218. அம்பாசமுத்திரம்: முருகையாபாண்டியன்
219. பாளையங்கோட்டை: தமிழ்மகன் உசேன்
220. நாங்குநேரி : விஜயகுமார்
221. ராதாபுரம் : லாரன்ஸ்
222. கன்னியாகுமரி: தளவாய்சுந்தரம்
223. நாகர்கோவில் : திருமதி டாரதி சேம்சன்
224. குளச்சல் : பச்சைமால்
225. பத்மநாபபுரம்: ராஜேந்திரபிரசாத்
226. விளவன்கோடு : நாஞ்சில் டொமினிக் (எ) டொமினிக் சாவியோ ஜார்ஜ்
227. கிள்ளியூர் : திருமதி மேரி கமல பாய்
தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்:
1. டாக்டர் செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசு கட்சித் தலைவர்): மதுராந்தகம் (தனி)
2. ஆர்.சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்): திருச்செந்தூர்
3. உ.தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர்): காங்கேயம்
4 . எம்.தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர்): ( நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம் )
5. எஸ்.ஷேக் தாவூத் (தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர்): கடையநல்லூர்
6. எஸ்.கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர்): திருவாடானை
17:59:00 | 0
comments | Read More
Subscribe to:
Posts (Atom)



