நாட்டில் நிலவும் சூடான காலநிலையிலிருந்து பாதுகாப்புப் பெரும் பொருட்டு சகல அரச பாடசாலைகளையும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையில் நடாத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் யோசனை முன்வைத்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த யோசனையை அச்சங்கம் கல்வி அமைச்சுக்கு விடுத்துள்ளது.
நண்பகல் 12.00 மணியுடன் பாடசாலை விடுவது மிக மோசமான ஒரு நிலையாகும் என அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் நலின்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
சூடான காலநிலையின் போது குளிரான பானங்களை குடிப்பது உகந்ததல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.